Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆயுத பூஜை, தீபாவளிக்கு 30,622 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் விஜய் பார்த்தின் தமிழன்

ஆயுத பூஜை, தீபாவளிக்கு 30,622 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் விஜய் பார்த்தின் தமிழன்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விழாக்களை கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் இருந்து 30,622-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விழாக்களை கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமை தாங்கினார். இதில், காவல்துறை, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியதாவது:

மக்கள் பண்டிகைக் காலங்களில் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதன்படி, ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் இணைக்கப்பட்டு, 4 நாட்களில் மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 நாட்களில் மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பேருந்துகள் புறப்படும் இடங்கள் பரவலாக்கப்பட்டு தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறந்தவெளிப் பகுதியிலிருந்தும் புறப்படும். கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளன.

கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தும், ஆந்திரப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் வழக்கம்போல் இயக்கப்படும். பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக மறைமலைநகர் மற்றும் கிளாம்பாக்கம் இடையே 45 கட்டணமில்லா மாநகரப் பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. இந்த சேவை மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் பட்சத்தில், இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, பண்டிகைக் காலங்களில் மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட வழித்தடங்களில் எப்போதும் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், கூடுதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குமாறு தெற்கு ரயில்வே அதிகாரிகளிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் தனியாகக் கூட்டம் நடத்தப்பட்டு, பயணிகளிடம் நியாயமான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும் அறிவுறுத்தப்படும் இவ்வாறு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறினார்.

முந்தைய செய்தி
புதுச்சேரியில் தீபாவளிக்கு சிறப்புத் தொகுப்பு
அடுத்த செய்தி
கோயில் பணியிடங்களை மகளிர் உதவி குழுவினரால் நிரப்ப உத்தரவு

தொடர்புடைய செய்திகள்